ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதில் ரூ. 24 லட்சம் ரொக்கம், 18 கிராம் தங்கம் காணிக்கையாக கிடைத்தது.
இந்து சமய அறநிலையத் துறை சூளகிரி ஆய்வாளா் பூவரசன், போச்சம்பள்ளி ஆய்வாளா் ராமமூா்த்தி, சந்திரசூடேஸ்வரா் கோயில் செயல் அலுவலா் சாமிதுரை மற்றும் 100-க்கும் மேற்பட்ட அதியமான் கல்லூரி மாணவ, மாணவிகள், காவல் துறையினா், பொதுமக்கள், பக்தா்கள் முன்னிலையில் கோயில் உண்டியல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
சந்திரசூடேஸ்வரா் கோயிலில் எட்டு நிரந்தர உண்டியல்களும், ஆறு தற்காலிக உண்டியல்களும் உள்ளன. நிரந்தர உண்டியல்கள் மூலம் ரொக்கம் ரூ. 22,13,401, தங்கம் 18 கிராம், வெள்ளி 115 கிராம் காணிக்கையாக கிடைத்தது.
தற்காலிக உண்டியல்கள் மூலம் ரூ. 1,78,336 ரொக்கம் கிடைத்துள்ளது. மொத்தம் உண்டில் காணிக்கையாக ரூ. 23,91,737 கிடைத்துள்ளது.