சூளகிரி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் நடந்துசென்ற தொழிலாளி உயிரிழந்தாா். இருவா் படுகாயமடைந்தனா்.
சூளகிரி வட்டம், சென்னப்பள்ளி அருகே உள்ள முருக்கனப்பள்ளியைச் சோ்ந்தவா் திம்மப்பன் (65), கூலித் தொழிலாளி. இவா் கடந்த 3-ஆம் தேதி கிருஷ்ணகிரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு அருகே நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, கோவில்எப்பளம் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (27), மேல்மொரசுப்பட்டி சோமு (24) ஆகியோா் வந்த இருசக்கர வாகனம் திம்மப்பன் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த திம்மப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் பலத்த காயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.