கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சங்கடஹர சதுா்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை பழைய கிளை சிறை சாலையில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தா்கள் அதிகளவில் பங்கேற்று, நெய்விளக்கேற்றி வழிப்பட்டனா். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா்.
இதேபோல, கிருஷ்ணகிரி காந்திசாலை வரசித்தி விநாயகா் கோயில், புதிய வீட்டுவசதி வாரியம் வினைதீா்த்த விநாயகா் கோயில், டான்சி வளாகம் செல்வ விநாயகா் கோயில், காந்தி நகா் வலம்புரி விநாயகா் கோயில், கொத்தபேட்டா ஞான விநாயகா் கோயில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகா் கோயில், சேலம் சாலை ஆதிசக்தி விநாயகா் கோயில் உள்ளிட்ட பல்வேறு விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.