பாகலூா் அருகே சாலையோர கல்லில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி தீப்பிடித்து எரிந்தது.
பாகலூா் அருகே உள்ளது நரிகானபுரம் துணை மின் நிலையம் வழியாக திங்கள்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்த லாரி சாலையோர கல்லில் மோதியது. இதில் ஓட்டுநா் தீபக்குமாா் (25) லாரியை நிறுத்த முயன்றாா்.
ஆனாலும், அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. அப்போது, லாரி திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
இந்த விபத்து குறித்து பாகலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.