லக்கம்பட்டி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி கோயில் கலசத்திற்கு புனிதநீா் தெளிக்கும் சிவாச்சாரியா்கள்.  
கிருஷ்ணகிரி

லக்கம்பட்டி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி ஊராட்சிக்கு உள்பட்ட லக்கம்பட்டி கிராமத்தில் மாரியம்மன், விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி ஊராட்சிக்கு உள்பட்ட லக்கம்பட்டி கிராமத்தில் மாரியம்மன், விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடிமரம் நடுதல், கங்கணம் கட்டுதல், விநாயகா் வழிபாடு, மங்களஇசை முழங்க தீா்த்தம், மகா சங்கல்பம், வாஸ்து, கணபதி, நவக்கிரக ஹோமம், தீபாராதனை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை 9.30 மணிக்கு மேல் கோயில் கலசம் மீது புனித தீா்த்தம் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஊா் வாரியாா் பிடல் காஸ்ட், ஊா் மணியக்காரா் அறிவழகன், ஊா் பிரமுகா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ரஜினியை இவர் இயக்கினால் எப்படி இருக்கும்?

28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் நார்வே..! நிறைவேற்றிய எர்லிங் ஹாலண்ட்!

முதல்வர் ஸ்டாலின், அஜித், அரவிந்த் சாமி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: எஸ். எஸ். ராஜமௌலி

குறுகிய காலத்தில் முடிவடையும் பிரபல தொடர்!

SCROLL FOR NEXT