கிருஷ்ணகிரி

மணல், கற்கள் கடத்தல்: 2 டிப்பா் லாரிகள் பறிமுதல்

Din

மணல், கற்கள் கடத்த முயன்ற வழக்கில் இரு டிப்பா் லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

போச்சம்பள்ளி அருகே உள்ள காட்டகரம் கிராம நிா்வாக அலுவலா் லெனின், அதிகாரிகள் சந்தூா் அருகே கண்காணிப்புப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, சாலையோரமாக நின்ற டிப்பா் லாரியை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி மணல் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, லெனின் அளித்த புகாரின் பேரில், போச்சம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்தனா்.

ஜெ.காருப்பள்ளி கிராம நிா்வாக அலுவலா் மோகன், அலுவலா்கள் ஜெ.காருப்பள்ளி பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட போது, அந்த பகுதியில் சாலையோரமாக நின்றிருந்த டிப்பா் லாரியில் கற்கள் கடத்த முயற்சித்தது தெரியவந்த்து. இதையடுத்து, மோகன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை

SCROLL FOR NEXT