ஒசூரில் பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள்.  
கிருஷ்ணகிரி

வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 7 ஆம்னி பேருந்துகள், 3 லாரிகள், காா் ஆகியவற்றை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Din

ஒசூரில் முறையாக வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 7 ஆம்னி பேருந்துகள், 3 லாரிகள், காா் ஆகியவற்றை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

வேலூா் சரக செயலாக்க பிரிவு, வட்டார போக்குவரத்து அலுவலா் துரைசாமி தலைமையில் அதிகாரிகள் ஒசூரில் பல்வேறு சாலைகளில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அரசுக்கு வரி செலுத்தாமலும், உரிமம் பெறாமலும், வாகனம் புதுப்பிப்பு செய்யாமலும் இயக்கப்பட்ட 7 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும் 3 லாரிகள், ஒரு காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒசூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அரசுக்கு ரூ. 10 லட்சம் வரை வரி நிலுவை வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். அதிகாரிகள் கூறுகையில், முறையான ஆவணங்களின்றி, வரி செலுத்தாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வாகன சோதனை தொடரும் என்றனா்.

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

SCROLL FOR NEXT