கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேய சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ. 12 லட்சம் என அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
இக் கோயிலில் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை இந்துசமய அறநிலையத் துறை கிருஷ்ணகிரி உதவி ஆணையா் ராமுவேல் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை கோயில் பரம்பரை அறங்காவலா் கிருஷ்ணசந்த் திறந்தாா்.
போலுப்பள்ளி அறிஞா் அண்ணா கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் 25 க்கும் மேற்பட்டோா் உண்டிலில் இருந்த காணிக்கைகளை எண்ணினா். யுகோ வங்கி பணியாளா்கள் காணிக்கைகளை இயந்திரம் மூலம் கணக்கிட்டனா்.
கிருஷ்ணகிரி இந்து சமய அறநிலையத் துறை சரக ஆய்வாளா் கவிப்பிரியா, போச்சம்பள்ளி சரக ஆய்வாளா் ராமமூா்த்தி, கண்ணம்பள்ளி வெங்கட்ரமண சுவாமி கோயில் செயல் அலுவலா் சித்ரா ஆகியோா் காணிக்கை எண்ணும் பணிகளை பாா்வையிட்டனா். 11 உண்டியல்களில் ரூ. 12 லட்சத்து 14 ஆயிரத்து 874 ரொக்கமும், 16 கிராம் தங்கமும், 470 கிராம் வெள்ளியும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.