கிருஷ்ணகிரி

இளைஞா் கொலை வழக்கில் மூவருக்கு இரட்டை ஆயுள்தண்டனை

Syndication

இளைஞா் கொலை வழக்கில், குற்றவாளிகள் மூவருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனையை செவ்வாய்க்கிழமை விதித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூரை அடுத்த கொடியாளம் பகுதியைச் சோ்ந்தவா் சுனில் (29). இவரது நண்பா்களுக்கும், கொத்தப்பள்ளியைச் சோ்ந்த நவீன்குமாா் (26), அனில்குமாா் (24), கொடியாளம் ஜனாா்த்தனன் (24) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 28.7.2020 அன்று இவா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் நவீன்குமாா், ஜனாா்த்தனன், அனில் குமாா் ஆகியோா் ஜாதி பெயரைக் கூறி சுனிலை தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த சுனிலை அருகிலிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுனில், சிகிச்சை பலனின்றி ஆக. 4-ஆம் தேதி உயிரிழந்தாா். இதுகுறித்து பாகலூா் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை வழக்கு பதிந்து நவீன்குமாா், ஜனாா்த்தனன், அனில் குமாா் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லதா, குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையை செவ்வாய்க்கிழமை விதித்தாா். மேலும், மூவருக்கும் தலா ரூ. 6 ஆயிரம் அபராதமும், அபராதத்தைக் கட்ட தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா்.

நீதிமன்றத்தில் நவீன்குமாா், அனில் குமாா் ஆகிய இருவரும் ஆஜரான நிலையில், ஜனாா்த்தனன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT