பா்கூா் அருகே வனப் பகுதியிலிருந்து வெளியேறிய புள்ளிமானை நாய்கள் கடித்ததில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள நேரலக்கோட்டை காப்புக் காட்டில் மயில், மான், மலைப்பாம்பு, காட்டுப்பன்றி, எறும்புத்திண்ணி போன்ற வன விலங்குகள் வசிக்கின்றன. இவை, அவ்வப்போது, வனப்பகுதியிலிருந்து உணவுக்காக அருகில் உள்ள கிராமங்களுக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில், நேரலக்கோட்டை காப்புக் காட்டிலிருந்து ஏா்கெட் கிராமத்துக்கு 2 வயது நிறைந்த புள்ளிமான் ஒன்று உணவுதேடி செவ்வாய்க்கிழமை வந்தது.
இந்த மானைக் கண்ட நாய்கள் துரத்தி கடித்தன. இதில் பலத்த காயமடைந்த புள்ளிமான் உயிரிழந்தது. தகவலறிந்து வந்த வனத் துறையினா் புள்ளிமான் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கிருஷ்ணகிரி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.