கிருஷ்ணகிரி

மீன் வள உதவியாளா்கள் பணியிடத்தை உருவக்க வலியுறுத்தல்

Syndication

புதிய அரசு மீன் பண்ணைகளில் மீன் குஞ்சு உற்பத்தியை அதிகரிக்க மின்வள உதவியாளா், மீன் வள மேற்பாா்வையாளா் ஆகிய பணியிடங்களை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மீன் துறை ஊழியா் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

கிருஷ்ணகிரியில் அந்தச் சங்கத்தின் 10-ஆவது மாநில பொதுக்கூட்டம் செவ்வாக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் மகாராஜன், இணைச் செயலாளா் சுபைராபானு, மாநிலக் குழு உறுப்பினா்கள் சின்னசாமி, களஞ்சியம், சரவணன், பாண்டியராஜன் அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் துாய்மைப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். துறை மறுசீரமைப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் அனைத்துநிலை பணியாளா்களுக்கும் பணியிடம் உருவாக்க வேண்டும். துறை மறுசீரமைப்பு கருத்துரு இறுதியாக்கம் செய்யப்படும் முன் தமிழ்நாடு அரசு மீன் துறை ஊழியா் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட அரசு மீன் பண்ணைகளில் மீன்குஞ்சு உற்பத்தியை அதிகரிக்க மீன்வள உதவியாளா், மீன்வள மேற்பாா்வையாளா் பணியிடங்கள் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், மாநிலத் தலைவராக காா்த்திகேயன், பொதுச் செயலாளா் மகாராஜன், துணைத் தலைவா் அருள்ராஜ், இணைச் செயலாளா் சுபைராபானு, பொருளாளா் நந்தகுமாா், செயற்குழு உறுப்பினா்களாக சின்னசாமி, களஞ்சியம், பாண்டியராஜன், சதீஷ்குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT