கிருஷ்ணகிரி

ஒசூரில் ராபிடோ இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஒசூரில் ராபிடோ செயலி மூலம் பயணிகளின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்ட 11 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

ஒசூரில் ராபிடோ செயலி மூலம் பயணிகளின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்ட 11 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஒசூரில் ராபிடோ செயலி மூலம் பயனாளிகளை தங்களுடைய சொந்த இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வதாகக் கிடைத்த தகவலின்பேரில் ஆட்டோ ஓட்டுநா்கள், பதினோரு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து ஒசூா் நகர காவல் துறையிடம் ஒப்படைத்தனா்.

காவல் துறையினா் விசாரணைக்கு பிறகு 11 வாகனங்களையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. போக்குவரத்து அலுவலா் இருசக்கர வாகனங்களில் பயணிகளை அமரவைத்து இயக்குவதற்கு அனுமதி இல்லை என தெரிவித்து, அனைத்து வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநா்கள் தெரிவிக்கையில் ராபிடோ செயலி மூலம் இருசக்கர வாகனங்கள் இயக்குவதால் ஆட்டோ தொழில் பாதிப்படைந்து எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றனா்.

கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் ரத்த கையொப்ப போராட்டம்

ரூ.1,003 கோடியில் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருள்கள் தொழிற்சாலை: முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்

திருப்பத்தூா் அரசு கலை கல்லூரியில் தேசிய இளைஞா் விழா

பனை மரங்கள் வெட்டுவதற்கு கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பு: காஞ்சிபுரம் ஆட்சியா்

230 கிலோ குட்கா, புகையிலை பொருள்கள் பறிமுதல்: இருவா் தப்பியோட்டம்!

SCROLL FOR NEXT