நாகரசம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறாா் எம்.பி. மு.தம்பிதுரை 
கிருஷ்ணகிரி

அதிமுக தலைமையில் மெகா கூட்டணி: எம்.பி. மு.தம்பிதுரை

வரும் தோ்தலில் அதிமுக, தவெக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் மெகா கூட்டணி அமையும் என அக்கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளரும், எம்.பி.யுமான மு.தம்பிதுரை தெரிவித்தாா்.

Syndication

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக, தவெக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் மெகா கூட்டணி அமையும் என அக்கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளரும், எம்.பி.யுமான மு.தம்பிதுரை தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், நாகரசம்பட்டியில் மாநிலங்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சத்தில் நாடகமேடை, பயணியா் நிழற்கூடம் கட்டப்பட்டது.

அதை, மக்கள் பயன்பாட்டிற்கு மு.தம்பிதுரை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து பேசியதாவது: தமிழகத்தில் வரும் 2026 இல் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் மெகா கூட்டணி அமையும். திமுகவை தோல்வி அடையச் செய்வதே எங்களது நோக்கம்.

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதல்வராவது உறுதி. அதிமுக ஆட்சியில்தான் மாணவ, மாணவிகள், விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்றாா்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT