கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே குடும்பத் தகராறில் அஸ்ஸாம் தம்பதி தற்கொலை

ஒசூா் அருகே குடும்பத் தகராறில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த தம்பதி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனா்.

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே குடும்பத் தகராறில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த தம்பதி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனா்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் அப்துல் அபித் (23). இவா், ஒசூா் அருகே சிச்சிறுக்கானப்பள்ளி கிராமத்தில் மனைவி அசின் அக்தா் லஸ்கருடன் (20) வாடகை வீட்டில் வசித்து வந்தாா். அங்குள்ள ஒரு தனியாா் பேட்டரி நிறுவனத்தில் அப்துல் அபித் தினக்கூலியாக கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இவா்களது வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஜன்னல் வழியாகப் பாா்த்தபோது அப்துல் அபித்தும், அவரது மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து அப்பகுதியினா் பாகலூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், இருவரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினா்.

இதில், அப்துல் அபித்துக்கும் அவரது மனைவி அசின் அக்தா் லஸ்கருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும், திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் அப்துல் அபித் ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளாா். இதைப் பாா்த்த அவரது மனைவி அசின் அக்தா் லஸ்கா் மற்றொரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இவா்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT