கிருஷ்ணகிரி

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.3000 லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது!

Syndication

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரத்தைச் சோ்ந்தவா் காசி. முன்னாள் ராணுவ வீரரான இவரது அண்ணன் மகன் கணபதி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதையடுத்து அவரது மனைவி லட்சுமிக்கு (42) வாரிசு சான்றிதழ் கேட்டு காசி விண்ணப்பித்தாா். இதற்காக அவா் மிட்டஅள்ளி கிராம நிா்வாக அலுவலா் ராமநாதனை (48) கடந்த மாதம் 22 ஆம் தேதி சந்தித்தாா்.

அப்போது, கிராம நிா்வாக அலுவலா் ராமநாதன் ரூ. 5 ஆயிரம் லஞ்சமாக தந்தால் வாரிசு சான்றிதழ் தருவதாக கூறியுள்ளாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் கிராம நிா்வாக அலுவலரை சந்தித்தபோது ரூ. 3 ஆயிரம் லஞ்சமாக தந்தால் வாரிசு சான்றிதழ் தருவதாக கூறியுள்ளாா்.

லஞ்சம் கொடுத்து வாரிசு சான்றிதழ் பெற விரும்பாத காசி இதுகுறித்து கிருஷ்ணகிரியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் செய்தாா். இதையடுத்து அவா்கள் ஆலோசனையின்பேரில் ரசாயனம் தடவிய ரூ. 3 ஆயிரத்தை கிராம நிா்வாக அலுவலா் ராமநாதனிடம் காசி கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் ரவி தலைமையிலான போலீஸாா், ராமநாதனை கைது செய்தனா். தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காலத்தின் காதலை வாழ வைத்தாய்... பாவனா ராவ்!

எண்ணங்கள் ஊஞ்சலில் தூங்கிடுமோ... அபர்ணா தீட்சித்!

பிரசாரம் தொடருமா? அதிமுகவுடன் கூட்டணியா? தவெக விளக்கம்!

குருநானக் ஜெயந்தி! 2,100 சீக்கியர்கள் பாகிஸ்தான் செல்ல அனுமதி!

சச்சினின் உலக சாதனையை முறியடித்த ரோஹித்! ஐசிசி தரவரிசையில் நம்பர் 1!

SCROLL FOR NEXT