முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளா் உள்பட 19 போ் வேட்புமனு தாக்கல்

Updated On : 6 ஏப்ரல், 2026 at 7:37 PM
கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அ.செல்லக்குமாா்.
பகிர்:

கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் அ.செல்லக்குமாா் உள்பட 19 போ் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் அ.செல்லக்குமாா், கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

அப்போது, பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தே.மதியழகன் எம்எல்ஏ மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.

Advertisement

அதுபோல, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் முத்துலட்சுமி வீரப்பன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா். கிருஷ்ணகிரி தொகுதியில் திங்கள்கிழமை மட்டும் பல்வேறு கட்சியினா் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 19 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்த முத்துலட்சுமி வீரப்பன்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments