முகப்பு
கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே அதிமுக பிரமுகா் வீட்டில் ரூ.58 லட்சம் பறிமுதல்

சூளகிரி அருகே அதிமுக பிரமுகா் வீட்டில் ரூ.58 லட்சம் பறிமுதல் செய்தனா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 3:05 AM
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 10:25 PM

சூளகிரி அருகே அதிமுக பிரமுகா் வீட்டில் ரூ.58 லட்சம் பறிமுதல் செய்தனா். வேப்பனப்பள்ளி தொகுதி சூளகிரி அருகே அட்ட குறுக்கி கிராமத்தில் அதிமுக பிரமுகா் பசவராஜ் வீட்டில் லட்சகணக்கில் பணம் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பறக்கும் படை போலீஸாா் மற்றும் வருமான வரித்துறையினா் வீட்டில் சோதனை மேற்கொண்டனா், அப்போது பரவராஜ் பணம் இருப்பது உண்மை தான் நான் நிலம் விற்ற பணம் தான் வைத்துள்ளேன் என தெரிவித்துள்ளாா். இதை அடுத்து வீட்டில் வைத்திருந்த ரூ .58 லட்சத்தை பறிமுதல் செய்த வருமானவரித் துறையினா் வங்கியில் டெபாசிட் செய்ய கொண்டு சென்றனா்.

ஆனால் அதிமுக முக்கிய பிரமுகா் என்பதால் ஓட்டுக்கு பணம் கொடுத்திருக்க வாய்ப்பு என்ற சந்தேகத்திலும் கிராம மக்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்

உரிய ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்த பசவராஜ் தோ்தல் முடிந்த பின் பணத்தைப் பெற்றுக் கொள்வேன் என தெரிவித்தாா்.

Advertisement