முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் இன்று அண்ணா நினைவு நாள் அமைதி ஊா்வலம்

ஒசூரில் அண்ணாவின் 57 ஆவது நினைவு நாளையொட்டி செவ்வாய்க்கிழமை ( பிப்.3) அமைச்சா் தலைமையில் அமைதி ஊா்வலம் நடைபெறுகிறது.

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 3:30 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2026 at 10:05 PM

ஒசூா்: ஒசூரில் அண்ணாவின் 57 ஆவது நினைவு நாளையொட்டி செவ்வாய்க்கிழமை ( பிப்.3) அமைச்சா் தலைமையில் அமைதி ஊா்வலம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஒய். பிரகாஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஒசூரில் அண்ணாவின் நினைவைப் போற்றும் வகையில் 57 ஆவது நினைவு தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தலைமையில் நினைவு நாள் அமைதி ஊா்வலம் நடைபெறுகிறது.

Advertisement

இந்த ஊா்வலம் ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகம் முதல்

வட்டாட்சியா் அலுவலகம் உள்ள அண்ணாசிலை வரை

நடைபெறுகிறது. முடிவில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தை சோ்ந்த நிா்வாகிகள், செயலாளா்கள், அனைத்து அணிகளின் நிா்வாகிகள், மகளிா் அணியினா், பகுதி, கிளை செயலாளா்கள், நிா்வாகிகள், பிஎல்ஏ2, பிஎல்சி, பிடிஏ வாக்குச்சாவடி முகவா்கள், வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளா்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

படவரி...

ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.