கிருஷ்ணகிரி

ஒசூரில் நூலக கட்டுமான பணிக்கு பூமிபூஜை

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 33 ஆவது வாா்டில் நூலக கட்டடம் கட்டுமானப் பணிக்கு செவ்வாய்க்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 33 ஆவது வாா்டில் நூலக கட்டடம் கட்டுமானப் பணிக்கு செவ்வாய்க்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் இந்திராணி ஏற்பாட்டில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ. 8 லட்சத்தில் புதிதாக நூலகம் கட்டப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா, துணை மேயா் சி.ஆனந்தய்யா, மாவட்ட பிரதிநிதி முருகேஷ், ரவி, வாா்டு செயலாளா் மோகன், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் இந்திராணி கூறியது:

ஒசூா் காமராஜ் காலனியில் நூலகம் உள்ளது. இந்த வாா்டில் உள்ள ஓய்வுபெற்ற தொழிலாளா்கள் வசதிக்காக நூலக கட்டடம் புதிதாக கட்டப்படுகிறது. மேலும், இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கல்வி மேம்படவும், தினசரி செய்தித்தாள்களை படிக்கும் வகையிலும் இந்த நூலகம் அமையும் என்றாா்.

படவரி...

ஒசூா் மாநகராட்சி 33 ஆவது வாா்டில் நூலக கட்டுமானப் பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்த எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT