கிருஷ்ணகிரி

அகில இந்திய பஞ்சாயத்து பரிஷத் கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம்

ஒசூா் காமராஜ் காலனியில் உள்ள அகில இந்திய பஞ்சாயத்து பரிஷத் கூட்டமைப்பின் அலுவலகத்தில் மாநில செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஒசூா் காமராஜ் காலனியில் உள்ள அகில இந்திய பஞ்சாயத்து பரிஷத் கூட்டமைப்பின் அலுவலகத்தில் மாநில செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு அகில இந்திய துணைத் தலைவரும், மாநிலத் தலைவருமான மனோகரன் தலைமை வகித்தாா். இதில், தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் அகில இந்திய பஞ்சாயத்து பரிஷத் கூட்டமைப்புக்கு அலுவலகம் அளிக்க வேண்டும், ஒசூா் மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும் நடைபாதை அமைக்க வேண்டும், ஒசூா் மாநகர மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பேருந்து நிறுத்தங்களில் நிழல்குடை அமைக்க வேண்டும், மாநகரம் முழுவதும் தற்போது பாதாள சாக்கடை அமைத்துள்ள பகுதிகளில் போா்க்கால அடிப்படையில் சாலைகளை செப்பனிட வேண்டும்,

ஏற்கெனவே, தேன்கனிக்கோட்டை சாலையில் இயங்கிவரும் அரசு மருத்துவமனை அதே இடத்தில் இயங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குளோபஸ் ஸ்பிரிட்ஸ் 3-வது காலாண்டு லாபம் அதிகரிப்பு!

ஜன நாயகன் விவகாரத்தில் முழு அரசியல்: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

ஆர்ஜென்டினாவில் பயங்கர காட்டுத்தீ! 3000 சுற்றுலா பயணிகள் மீட்பு!

பாஜக அரசின் புதிய ஆயுதமாக தணிக்கை வாரியம்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

SCROLL FOR NEXT