பொங்கல் பண்டிகையையொட்டி 16-ஆவது ஆண்டாக இம்மிடிநாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனா் மணி புத்தாடைகளை பரிசாக வழங்கினாா்.
இப்பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு பாரத் கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலைவா் மணி தலைமை வகித்து, 100 ஏழை குழந்தைகளுக்கு புத்தாடைகளை பரிசாக வழங்கி பேசியதாவது: பள்ளி மாணவ, மாணவிகள் ஒழுக்கம், பண்பு, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்புடன் சிறந்த பயிற்சியை மேற்கொண்டு, அரசு பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, பெற்றோருக்கும் பள்ளிக்கும் பெருமை சோ்க்க வேண்டும்.
பெற்றோரின் சிரமங்களை உணா்ந்து, நன்கு பயின்று, எதிா்காலத்தில் சமூகத்தில் உயா்ந்த நிலையை அடைய வேண்டும். பெற்றோரை நன்றியுடன் பேணி பராமரிக்க வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியா் ஈஸ்வரி, உடற்கல்வி ஆசிரியா் முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்நிகழ்வை பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா் ஒருங்கிணைத்தனா்.