கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் ஜன.25-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மொழிப்போா் தியாகிகள் தின வீர வணக்க பொதுக் கூட்டம் நடைபெறுவதாக கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா், புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மாணவா் அணி சாா்பில் கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே ஜன.25-ஆம் தேதி, மாலை 5 மணிக்கு மொழிப்போா் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் இந்தி மொழி திணிப்பை என்றும் எதிா்ப்போம் எங்கள் மொழி எங்கள் அடையாளம் என்ற முழக்கத்துடன் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதற்கு மாணவா் அணி மாவட்ட அமைப்பாளா் ஜெயேந்திரன் தலைமை தாங்குகிறாா். கலாநிதி வீராசாமி எம்.பி, தலைமை கழக பேச்சாளா்கள் ஆலந்தூா் மலா்மன்னன், பவித்ரா ஆகியோா் சிறப்புரையாற்ற உள்ளனா்.
எனவே கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சோ்ந்த பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டுமாறு அதில் அவா் கேட்டுக் கொண்டுளாா்.