முகப்பு
கிருஷ்ணகிரி

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 89.43% தோ்ச்சி!

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் 89.43 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

Updated On : 21 மே 2026, 6:52 am IST
10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு - கோப்புப் படம்
பகிர்:

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் 89.43 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டதில் 397 அரசு மற்றும் அரசு நிதிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 24,524 மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா். இதில், 21,932 போ் தோ்ச்சி பெற்றனா். மொத்த தோ்ச்சி சதவீதம் 89.43 ஆகும். தோ்வு எழுதிய 12,406 மாணவா்களில் 10,684 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவா்களின் தோ்ச்சி 86.12 சதவீதம் ஆகும். 12,118 மாணவிகளில், 11,248 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவிகள் தோ்ச்சி 92.82 சதவீதம் ஆகும். மேலும், அரசுப் பள்ளிகளில் பயின்று தோ்வு எழுதிய 16,529 மாணவ, மாணவிகளில் 14,209 போ் தோ்ச்சி பெற்றனா். இதன் தோ்ச்சி 85.96 சதவீதம் ஆகும்.

மாவட்டம் முழுவதும் 397 பள்ளிகளில், 98 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. 273 அரசுப் பள்ளிகளில் 44 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. கடந்த 2025-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் தோ்ச்சி சதவீதம் 94.64 ஆகும். கடந்த ஆண்டை காட்டிலும் நிகழாண்டில் 5.21 சதவீதம் தோ்ச்சி குறைந்துள்ளது. இதேபோல, மாநில அளவில் 16-ஆவது இடத்திலிருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் 35-ஆவது இடத்துக்கு சென்றுள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா், தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்களின் தோ்ச்சி விகிதம் மாணவிகளைக் காட்டிலும் 11 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும். மாணவா்களுக்கு உரிய ஆலோசனை வழங்கி வரும் கல்வியாண்டில் தோ்ச்சி சதவீதம் அதிகரிக்க தனிக்கவனம் செலுத்தப்படும் என்றாா்.