ஊரக வேலைத் திட்டம்: கூலி உயர்வு கோரி தர்னா
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூலி நாள் ஒன்றுக்கு ரூ.132 வழங்கக் கோரி தர்னா போராட்டம் நடைபெற்றது.
நாமக்கல்ஊரக வேலைத் திட்டம்: கூலி உயர்வு கோரி தர்னா
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூலி நாள் ஒன்றுக்கு ரூ.132 வழங்கக் கோரி தர்னா போராட்டம் நடைபெற்றது.
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூலி நாள் ஒன்றுக்கு ரூ.132 வழங்கக் கோரி தர்னா போராட்டம் நடைபெற்றது.
வெண்ணந்தூர் அண்ணா சிலை முன் அனைந்திந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தத் தர்னா போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் பி.கணேசன் தலைமை வகித்தார்.
போராட்டத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு முழுமையான கூலியான ரூ.132-யை வழங்க வேண்டும். திட்டத்தில் முறைகேடுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் எழுப்பப்பட்டன.
சங்கத்தின் நிர்வாகிகள் சி.பாலசுந்தரம், ஏ.சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.