நாமக்கல்

அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாக புத்தகங்கள் அளிப்பு

தினமணி

அரசு பள்ளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
 காமராஜர் பிறந்த நாள் விழா, அரசுப் பள்ளிகளுக்கு நூல் வழங்கும் விழா, கிளின் கிரீன் நாமக்கல் எனும் சிறப்புத் திட்டத்தின் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு பசுமை நாமக்கல் எனும் அமைப்பின் தலைவர் வ.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தருமபுரி மாவட்ட பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் மு.ராஜசேகர், சுப்பிரமணியம் கலை- அறிவியல் கல்லூரித் தாளாளர் பழனியாண்டி, நாமக்கல் தமிழ் சங்க அமைப்புத் தலைவர் அரசு பரமேஸ்வரன், பசுமை நாமக்கல் எனும் அமைப்பின் செயலர் தில்லைசிவக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
 இதையடுத்து, நாமக்கல், சேலம், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 15 அரசுப் பள்ளிகளுக்கு தலா ரூ.20,000 வீதம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை சென்னை கெளரா பதிப்பகம் உரிமையாளர் ராஜசேகர் வழங்கினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT