தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் 10, 11 ஆம் தேதி நடத்தும் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வை நாமக்கல் மாவட்டத்தில் 4,366 பேர் எழுதுகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் நிலை 3, 4 பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வரும் 10, 11 ஆம் தேதி நடத்தப்படவுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் 10-ஆம் தேதி நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி, செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் மொத்தம் 1,836 விண்ணப்பதாரர்களும், 11 ஆம் தேதி செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி, செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரி, கிங் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் மொத்தம் 2,530 விண்ணப்பதாரர்களும் இத்தேர்வை எழுதவுள்ளனர்.
தேர்வு மையங்களுக்கு, தேர்வு நாள்களில் சிறப்புப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் தேர்வாணைய விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இனிவரும் காலங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படும்.
இதனால் அனைத்துத் தேர்வர்களும் தேர்வாணைய விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுத் தேர்வு எழுத வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.