நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மா மற்றும் பாக்கு சாகுபடியில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில், வரும் 20-ஆம் தேதி ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெறவுள்ளது என தலைவர் என்.அகிலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 20-ஆம் தேதி காலை 9 மணிக்கு பருத்தி, பயறு வகைப் பயிர்கள், மா மற்றும் பாக்கு சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெறுகிறது.
இப்பயிற்சியில், பருத்தி, மா, பாக்கு மற்றும் பயறுவகைப் பயிர்களில் சாகுபடிக்கு ஏற்ப மண் வளத்தைக் கண்டறியும் வழிமுறைகள், மண் வளத்தை மேம்படுத்தும் யுக்திகள், மண் வளத்துக்கேற்ப சமச்சீர் உரமிடுதல் குறித்து விளக்கப்படும்.
இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 19-ஆம் தேதிக்குள் நேரில் வந்தோ அல்லது 04286-266345, 266650 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.