நாமக்கல்

மானிய விலையில் தரமான விதைகள்

DIN

அதிக மகசூல் பெற மானிய விதையில் தரமான விதைகள் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகி விதைகள் சாகுபடி செய்ய உத்தேசித்துள்ள கொல்லிமலை வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள், நடப்பு பருவத்தில் ஜிபியு 67 மற்றும் கோ-14 ஆகிய ரகங்களை பயன்படுத்தி உயர் மகசூல் பெற்றிடலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
ராகி, நெல் போன்ற சாகுபடிக்கு தேவையான தரமான சான்று பெற்ற ராகி விதைகள் கொல்லிமலை செம்மேடு வேளாண்மை விரிவாக்க மையத்தில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. விதை கிராமத் திட்டம் 2017-18-இன் கீழ் ராகி விதைகள் 50 சதவீதம் மானிய விலையில் பெற்று பயன் பெறலாம்.
மேலும் சாகுபடி தொழில்நுட்ப செய்திகளை பகுதி வேளாண்மை உதவி அலுவலர் மூலமாகவும் மற்றும் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தையும் அணுகி பயன் பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
நெல் விதைகள்: கொல்லிமலை வட்டாரத்தில் நடப்பு பருவத்துக்கு நெல் சாகுபடி செய்ய இருக்கும் விவசாயிகள், நடப்பு பருவத்தில் நெல் விதைகள் சாகுபடி செய்ய உத்தேசித்துள்ள விவசாயிகள் ஐஆர்-20 ரகத்தை பயன்படுத்தி உயர் மகசூல் பெற்றிடலாம். சாகுபடிக்கு தேவையான தரமான சான்று பெற்ற நெல் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையம் செம்மேட்டில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இதற்கும் விதை கிராமத் திட்டம் 2017-18-இன் கீழ் நெல் விதைகள் 50 சதவீத மானிய விலையில் பெற்று பயன் பெறலாம். மேலும் சாகுபடி தொழில்நுட்ப செய்திகளை பகுதி வேளாண்மை உதவி அலுவலர் மூலமாகவும் மற்றும் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தையும் அணுகி பயன்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT