நாமக்கல்

பரமத்தி வேலூர் அரசு மருத்துவனையை தலைமை மருத்துவமனையாக அறிவிக்க கோரிக்கை

பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக அறிவிக்கவும், போதிய பணியாளர்களை நியமிக்கவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தினமணி

பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக அறிவிக்கவும், போதிய பணியாளர்களை நியமிக்கவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி வேலூரில் அரசு மருத்துவமனை உள்ளது. பரமத்தி வேலூர் தாலுகாவாக இருந்தும், இதுவரை இம் மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக மாற்றப்படாமலேயே உள்ளது.
 பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால், அடிக்கடி நிகழும் சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் மட்டுமே இம் மருத்துவமனை உள்ளது. இம் மருத்துவமனையில் 10-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளனர்.
 இம் மருத்துவமனைக்கு பாலப்பட்டி, ஜேடர்பாளையம், பரமத்தி, நன்செய் இடையாறு, பாண்டமங்கலம், கபிலர்மலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தினந்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாக வந்து மருத்துவ பரிசோதனை செய்து செல்கின்றனர். இம் மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரே பிரிவு வாரத்தில் இரண்டு முறை மட்டுமே இயங்குகிறது. இதற்கு நிரந்தரப் பணியாளர்களை நியமித்து, அனைத்து நாள்களும் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 பல் மருத்துவர் விடுப்பில் சென்றுள்ளதால், பல் மருத்துவ பிரிவில் தாற்காலிக மருத்துவரை நியமிக்க வேண்டும். மேலும் அவசர கால அறுவை சிகிச்சை பிரிவுக்கு உதவியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். மருத்துவமனைக்கு நிரந்தரமாக இரவுக் காவலரை நியமனம் செய்ய வேண்டும். இம் மருத்துவமனையில் ஒரு மருந்தாளுநர் மட்டுமே உள்ளனர். எனவே, இம் மருத்துவமனைக்கு தலைமை மருந்தாளுநர் மற்றும் மருந்தாளுநரை நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்களும், புற மற்றும் உள் நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT