முகப்பு
நாமக்கல்

நவ.16, 17-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16 மற்றும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16 மற்றும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில், படித்த வேலைவாய்ப்பற்றவர்களுக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, வரும் 16-ஆம் தேதி நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய வளாகத்திலும், 17-ஆம் தேதி மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய வளாகத்திலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முகாம் நடைபெற உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் நாமகிரிபேட்டை மற்றும் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட படித்த, வேலைவாய்ப்பற்றோர் பங்கேற்கலாம்.
மேலும், வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்துகொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாமக்கல் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது 04286-281131 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு நிறுவனத்தின் பெயரை வரும் 14-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →