முகப்பு
நாமக்கல்

பண மதிப்பிழப்பு நடவடிக்கை: பாஜக துண்டறிக்கை வழங்கி பிரசாரம்

பண மதிப்பிழப்பு நாளான நவம்பர் 8-ஆம் தேதியை பாஜக சார்பில் கருப்பு பண ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து, நாமக்கல் நகரப் பகுதியில் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

பண மதிப்பிழப்பு நாளான நவம்பர் 8-ஆம் தேதியை பாஜக சார்பில் கருப்பு பண ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து, நாமக்கல் நகரப் பகுதியில் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன.
மாவட்டத் தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே.மனோகரன், மாவட்ட துணைத் தலைவர் எம்.சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கிடைத்த பலன் தொடர்பாக நாமக்கல் நகரப் பகுதியில் பாஜகவினர் துண்டறிக்கைகள் விநியோகித்து பிரசாரம் மேற்கொண்டனர். மேலும், பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட பயன் குறித்தும் விளக்கிக் கூறினர்.
இதில், நகர பொதுச் செயலர் என். எஸ். செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.குப்புசாமி, மாவட்ட மகளிரணி நிர்வாகி எஸ்.மல்லிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →