முகப்பு
நாமக்கல்

குழந்தைகள் தின விழா

பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

நாமக்கல்

குழந்தைகள் தின விழா

பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
 பள்ளியின் தலைவர் ரவி விழாவுக்கு தலைமை தாங்கினார். பொருளர் டாக்டர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
 விழாவில் கலை நிகழ்ச்சிகள், ஆடை, அலங்கார அணிவகுப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான நாடகங்கள் நடைபெற்றன. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர், முதல்வர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.
 இதே போல், பரமத்தி வட்டார வள மையத்துக்குள்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் பள்ளி ஆயத்த முகாமில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
 வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார். பரமத்தி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அருள்புனிதன் விழாவில் கலந்துகொண்டு பேசினார்.
 விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பள்ளி ஆயத்த முகாமில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →