திருச்செங்கோட்டில் அ.ம.மு.க. கூட்டம்
திருச்செங்கோட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு, பரமத்தி, குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான செயல் வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
பேசியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், அதற்கு அழுத்தம் கொடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும் வரும் 16-ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும். ஒன்பது காவிரி கரையோர மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.