பரமத்தி வேலூர் ஏலச் சந்தையில் பூக்கள் விலை சரிவு
பரமத்திவேலூர் தினசரி பூக்கள் ஏலச் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூக்களின் விலை சரிந்தது.
பரமத்திவேலூர் தினசரி பூக்கள் ஏலச் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூக்களின் விலை சரிந்தது.
பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்குக் கொண்டு வந்து ஏலம் விடுகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 250-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 120-க்கும், அரளி கிலோ ரூ.100-க்கும், செவ்வந்தி கிலோ ரூ.100-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும் ஏலம் போனது.
நிகழ்வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.150-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100-க்கும், அரளி கிலோ ரூ. 80-க்கும், செவ்வந்தி கிலோ ரூ.120-க்கும், ரோஜா கிலோ ரூ. 120-க்கும் ஏலம் போனது. பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.