நாமக்கல்

முதல்வருக்கு பரமத்தி வேலூரில் வரவேற்பு 

தினமணி

மதுரையிலிருந்து எடப்பாடி நோக்கிச் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு நாமக்கல் மாவட்ட எல்லையான பரமத்தி வேலூரில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
 முன்னாள் அமைச்சர் முத்துசாமியின் மனைவி காலமானதையொட்டி எடப்பாடியில் உள்ள அவரது இல்லத்துக்கு முதல்வரும், துணை முதல்வரும் சென்றனர்.
 முன்னதாக மதுரையிலிருந்து எடப்பாடி நோக்கிச் சென்ற முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நாமக்கல் மாவட்ட எல்லையான பரமத்தி வேலூரில் மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, எம்பி., பி.ஆர்.சுந்தரம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம், கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி மற்றும் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அர. அருளரசு ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதில் நாமக்கல் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள் உடன்இருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

SCROLL FOR NEXT