முகப்பு
நாமக்கல்

திருநகர் காலனியில் குரங்குகள் தொல்லை

சங்ககிரி சாலை திருநகர் காலனியில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் அதிகளவில் கூட்டமாக வந்து குடியிருப்பு வாசிகளுக்கு பெரும் தொல்லைகளைத் தந்து வருகின்றன.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

சங்ககிரி சாலை திருநகர் காலனியில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் அதிகளவில் கூட்டமாக வந்து குடியிருப்பு வாசிகளுக்கு பெரும் தொல்லைகளைத் தந்து வருகின்றன.
திருநகர் காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அருகில் உள்ள மலைக்கரட்டிலிருந்து கூட்டம் கூட்டமாக குரங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பெரும் சேதங்களை உண்டாக்கி வருகின்றன. தண்ணீர் குழாய்கள், காய வைத்துள்ள துணிகளை சேதப்படுத்துகின்றன. மளிகை கடை வைத்து உள்ளவர்கள் முழு நேரமாக குரங்குகள் கடைகளின் பொருள்களை சேதப்படுத்தாமல் இருக்க கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டியதாய் உள்ளது.
குழந்தைகளை விளையாட மற்றும் பள்ளிகளுக்கு அனுப்பும் நேரங்களில் பெற்றோர் மிகுந்த அச்சத்தோடு இருக்கின்றனர். குரங்குகளின் தொல்லைகளைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →