நாமக்கல்

புதிய அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்குப் பரிசு

DIN

குமாரபாளையத்தில் புதிதாக திறக்கப்பட்ட நகர்புற சுகாதார நிலையத்தில் முதல் முறையாக சுகப் பிரசவத்தில் பிறந்த முதல் பெண் குழந்தைக்கு பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டதோடு, பெற்றோருக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. 
குமாரபாளையம் நகராட்சி, மாரக்காள்காட்டைச் சேர்ந்தவர் செளந்திரராஜன் (25).  இவரது மனைவி சசிரேகா (22). இவர்களுக்குத்  திருமணமாகி ஓராண்டாகிறது. கர்பிணியான சசிரேகா, அப்பகுதியில் உள்ள நகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்று வந்தார். 
நிறைமாத கர்பிணியான சசிரேகா, நகராட்சி நகர்நல மையத்தில் பிரசவத்துக்கு சேர்ந்தார். அங்கு, ஞாயிற்றுக்கிழமை சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. நவீன வசதிகளுடன் இம்மருத்துவனை திறக்கப்பட்டதில் முதன் முதலாக பெண் குழந்தை பிறந்துள்ளது.  இதையடுத்து, இக்குழந்தைக்கு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டதோடு, பெற்றோருக்கும் செவ்வாய்க்கிழமை பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. 
இம்மருத்துவமனை கடந்த ஆண்டு மே மாதத்தில் திறக்கப்பட்டு, அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிகழ்ச்சியில், குமாரபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், மருத்துவர் காயத்ரி, வட்டாட்சியர் ஆர்.ரகுநாதன், நகராட்சி ஆணையர்ஆர்.மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்று பாராட்டுத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT