கல்லூரி பேராசிரியைகள் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் பேராசிரியைகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-ஆவது ஊதியக் குழுவை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு ஆதரவாக இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் பல்வேறு இடங்களில் வாயிற் முழக்கப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் கவிஞர் ராலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கிளை செயலர் பாரதி தலைமை வகித்தார். கிளை தலைவர் எமிமாள் நவஜோதி முன்னிலை வகித்தார்.
இதில் மண்டல இணைச் செயலர் சர்மிளா பானு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் முத்துமணி, துணைத் தலைவர் புவனேஸ்வரி, இணைச் செயலர் ஆனந்தநாயகி உள்பட கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.