முகப்பு
நாமக்கல்

ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: பாவேந்தர் இலக்கிய பேரவை கண்டனம்

சென்னை ஐஐடி அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பதாக பாவேந்தர் இலக்கியப் பேரவை தெரிவித்துள்ளது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

சென்னை ஐஐடி அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பதாக பாவேந்தர் இலக்கியப் பேரவை தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து அதன் தலைவர் மருதகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற துறைமுகத் தொழில்நுட்ப ஆலோசனை மையம் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி,  இணையமைச்சர் பொன்.ராதாகிஷ்ணன் மற்றும் மத்திய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் அரசு விழாக்களில் வழக்கமாக இசைக்கப்படும் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு,  மாறாக சம்ஸ்கிருத பாடல் பாடியுள்ளனர்.  விழா இறுதியில் தேசியகீதம் இசைக்கப்பட்டது. 
பிரதமர் மோடி சம்ஸ்கிருதத்தை விட தமிழ்மொழி பழமையானது இனிமையானது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.  பிரதமரின் கருத்தை மத்திய அரசும், அதன் நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும்.  தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி.யில் தமிழுக்கு விரோதமான நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →