முகப்பு
நாமக்கல்

நாமக்கல் பாலதண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்

நாமக்கல் பாலதண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திரத்  திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை துவங்கியது.

Updated On : 29 மார்ச், 2018 at 8:11 AM
பகிர்:

நாமக்கல் பாலதண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திரத்  திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை துவங்கியது.
இதனையொட்டி காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை,  சங்கல்பம்,  கொடிப்பட பூஜை, ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள 28 அடி உயர கொடிமரத்தில் காலை 10.30 மணி அளவில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடந்தது. 
வியாழக்கிழமை  காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம்,  மாலை 6.30 மணிக்கு முருகன், வள்ளி, தெய்வயானை திருக்கல்யாண உத்ஸவம், சுவாமி  திருவீதி உலா நடைபெறவுள்ளது. 
வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மகாசங்கல்பம், 10 மணிக்கு 108 சங்கு அபிஷேகம், மகா தீபாராதனை, 11.30 மணிக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு சுவாமி சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்துள்ளனர்.
பரமத்தி வேலூரில்.. பரமத்தி வேலூர் வட்டம்,  பாலப்பட்டி கதிர்காமத்து  கதிர்மலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
 பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றில்  புனித நீராடி, தீர்த்தக்குடங்கள், காவடிகளுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதையடுத்து பிற்பகல் 1 மணிக்கு பாலசுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு முத்துக்கருப்பண்ணசுவாமி நினைவாக மகேஸ்வர பூஜை, இரவு 10 மணிக்கு அன்னதானம், வாணவேடிக்கை  நடைபெறுகிறது. 31ஆம் தேதி பிற்பகல் அபிஷேகம், ஆராதனை,  பொங்கலிட்டு மாவிளக்கு படைக்கும் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு மேல் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும், ஏப்ரல் 1ஆம் தேதி மாலை அன்னை சீதாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், இடும்பர் பூஜையும் நடைபெறுகின்றன. ஏப். 2ஆம் தேதி மாலை திருவிடையாற்றுபூஜையும், கட்டளைதாரர்கள் பூஜையும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பாலப்பட்டி கதிர்காமத்து கதிர்மலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.