முகப்பு
நாமக்கல்

குடிநீர் வழங்கக் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

ராசிபுரம் நகராட்சிக்குள்பட்ட 22-ஆவது வார்டு காமராஜர் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக் கோரி நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Updated On : 15 மே, 2018 at 2:44 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

ராசிபுரம் நகராட்சிக்குள்பட்ட 22-ஆவது வார்டு காமராஜர் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக் கோரி நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ராசிபுரம், சேந்தமங்கலம் பிரிவு சாலை அருகேயுள்ள 22- ஆவது வார்டு காமராஜ் நகர்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக இப்பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் இல்லை என்றும், இதுகுறித்து நகராட்சியில் பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் நகராட்சி அலுவலகம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி அதிகாரிகள், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பெண்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.