முகப்பு
நாமக்கல்

குப்பைக் கிடங்குகளில் தீ: சுற்றுச்சூழல் மாசு

ராசிபுரம் நகராட்சி குப்பைக் கிடங்குகளில் பிளாஸ்டிக், ரப்பர் பொருள்கள் தீப்பிடித்து எரிந்ததால், ராசிபுரம் அதிக

Updated On : 15 மே, 2018 at 2:43 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

ராசிபுரம் நகராட்சி குப்பைக் கிடங்குகளில் பிளாஸ்டிக், ரப்பர் பொருள்கள் தீப்பிடித்து எரிந்ததால், ராசிபுரம் அதிக புகைமூட்டம் ஏற்பட்டதோடு சுற்றுச்சூழலும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
ராசிபுரம் நகராட்சிக்குச் சொந்தமான தட்டாங்குட்டை ஏரி பகுதியில் உள்ள இடத்தில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இப் பகுதியில் குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இப் பகுதியில் உள்ள குப்பையில் தீப்பிடித்து தீப்பரவியது.
இதில், அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள், பழைய டயர் போன்ற ரப்பர் பொருள்களில் தீப்பரவியது. இதனால், சுற்றுச்சூழல் அப் பகுதியில் பெரிதும் பாதிக்கப்பட்டது.
நீண்ட தொலைவு வரை கரும்புகை பரவியதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இப் பகுதியில் அடிக்கடி இதுபோன்று தீப்பரவுதால் அப் பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.