நாமக்கல்

கலாம் பிறந்த நாள் விழா போட்டி: பள்ளி மாணவர்கள் 200 பேர் பங்கேற்பு

DIN

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் பள்ளி மாணவர்கள் 200 பேர் பங்கேற்றனர். 
  மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளான வரும் 15ஆம் தேதியன்று இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாட பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 
 அனைத்து பள்ளிகளும் வெள்ளிக்கிழமை முதல் வரும் 15ஆம் தேதி வரை அப்துல் கலாம் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.   மேலும், பள்ளிகள் அளவிலும், மாவட்ட அளவிலும் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. 
 இதன்படி,  மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி,  அறிவியல் கண்காட்சி,  பொன்மொழிகள் சொல்லுதல் போட்டி நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை
நடைபெற்றது. 
 இதில் மாவட்டம் முழுவதும்  50 பள்ளிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.  ஆசிரியர்கள் குமரேசன்,  மலர்க்கண்ணன், ஜெயமுருகன், செல்வ செந்தில்குமார்,  சித்ரா, கந்தசாமி உள்ளிட்டோர் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT