முகப்பு
நாமக்கல்

முதல்வருக்கு வரவேற்பு

சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக கரூர் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, நாமக்கல் மாவட்ட

Updated On : 22 அக்டோபர், 2018 at 8:07 AM
பகிர்:

சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக கரூர் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, நாமக்கல் மாவட்ட எல்லையான ராசிபுரம் அருகே கீரனூரில் அமைச்சர்கள் தலைமையில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க சேலத்தில் இருந்து காரில் கரூர் நோக்கி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, கீரனூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை வரவேற்பு அளிக்கப்பட்டது. 
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். நாமக்கல் எம்பி பி.ஆர்.சுந்தரம், எம்எல்ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சி.சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.