முகப்பு
நாமக்கல்

மஹேந்ரா பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 9:25 AM
பகிர்:

மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா அண்மையில் நடைபெற்றது. இதில், கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.ஜி. பாரத்குமார் தலைமை வகித்தார்.
 துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பங்கேற்று மாணவர்களிடையே பேசினார். இதில், அவர் பேசியதாவது: மாணவர்கள் சமூக அக்கறையுடன் கல்வி பயின்று சாதனையாளர்களாக திகழவேண்டும். வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளும் திறன், கல்வியுடன் ஒழுக்கம், விவேகத்துடன் எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மாணவர்களின் கல்வி மேம்பாட்டு திறன்களை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு விடாமுயற்சியின் அவசியத்தை பெற்றோர் அறிவுறுத்த வேண்டும் என்றார்.
 துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் எம். மாதேஸ்வரன், புலமுதல்வர்கள் வி.சண்முகம், பி.வெங்கடகிருஷ்ணன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பெற்றோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.