நாமக்கல்

வன உயிரின வார விழா: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் போட்டி

DIN


நாமக்கல்லில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், பேச்சுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
தமிழக வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா ஆண்டுதோறும் கொண்டாப்படுகிறது. அதன்படி நிகழாண்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, ஓவியம், தமிழ், ஆங்கில பேச்சுப் போட்டிகளை மாவட்ட வனத்துறை ஏற்பாடு செய்தது.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான ஓவியம், பேச்சுப் போட்டி நடைபெற்றன.
மாவட்ட வன அலுவலர் ரா.காஞ்சனா போட்டியைத் துவக்கி வைத்தார். வனச்சரகர்கள் ரவிச்சந்திரன், பெருமாள், அறிவழகன், உதவி வனப் பாதுகாவலர் சக்திவேல், வனவர்கள், வனப் பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போட்டியில் 45 அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு வன உயிரின வார விழாவில் பரிசு வழங்கப்படும். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட வன அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரைத் திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு சென்றடைந்த கள்ளழகர்!

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கலால் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் பதில்மனு தாக்கல்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

SCROLL FOR NEXT