நாமக்கல்

பாலப்பட்டியில் உயர் மின்கோபுர விளக்கு அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடக்கி வைத்தார்

DIN

பரமத்தி வேலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாலப்பட்டியில் ரூ. 8 லட்சம் செலவில்  உயர் மின்கோபுர விளக்கு அமைப்பதற்கான பூமி பூஜையை பரமத்தி வேலூர் எம்எல்ஏ கே.எஸ்.மூர்த்தி வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
பாலப்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகே உயர் மின்கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தொகுதி உறுப்பினரின் வேண்டுகோளை ஏற்று மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி முன்னிலை வகித்தார். பரமத்தி வேலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.எஸ். மூர்த்தி கலந்து கொண்டு ரூ. 8 லட்சம் மதிப்பிலான உயர் மின்கோபுர விளக்கு அமைப்பதற்கான பூமி பூஜையைத் தொடக்கி வைத்தார்.
பின்னர் ஓலப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில்  ரூ. 4.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திர பயன்பாட்டைத் தொடக்கி
வைத்தார். 
நிகழ்ச்சியில் மோகனூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சண்முகம், தலைமை ஆசிரியை திலகவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT