நாமக்கல்

மணியங்காளிபட்டியில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்

DIN

மோகனூர் ஒன்றியம், மணியங்காளிபட்டியில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலர் கோகுலகிருஷ்ணன் பேசியது:
ஏழை, எளிய பாமர மக்களுக்கும், சட்டம் பயன்பட வேண்டும். ஏழை மக்களுக்கு, சட்டம் எட்டாக் கனியாக இருக்கக் கூடாது. எந்த வகையான பிரச்னையாக இருந்தாலும், சமரச தீர்வு கண்டு, பகையைப் போக்கி நண்பர்களாக்கி விட
வேண்டும்.
பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றால் அரசு செலவில் வழக்குரைஞர் வைத்து வாதாட ஏற்பாடு செய்து தரப்படும். சாலை, மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி, ரேஷன் அட்டை, முதியோர், ஆதரவற்றோர், விதவை உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
ராசிபாளையம், செவந்தாம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT