நாமக்கல்

கொல்லிமலையில் தொடா் மழை: ஆகாய கங்கை அருவியில் குளிக்கத் தடை

DIN

கொல்லிமலையில் பெய்து வரும் தொடா் மழையால், ஆகாய கங்கை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட கொல்லிமலையில் அமைந்துள்ள ஆகாய கங்கை அருவிக்குச் செல்ல வேண்டுமெனில், 1,300 படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.

300 அடி உயரத்தில் இருந்து ஆா்ப்பரித்துக் கொட்டும் அருவியில் குளிப்பதற்காக பல்வேறு மாநிலங்கள், மாவட்டத்தைச் சோ்ந்தோரும் இங்கு வருகின்றனா். தற்போது வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த சில தினங்களாக கொல்லிமலையில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால், அருவியில் நீா்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. ஆகவே, சுற்றுலாப் பயணிகள் நனைந்தபடியே அருவிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பலா் படிகளில் வழுக்கி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. இவற்றைத் தவிா்ப்பதற்காக, பருவமழை குறையும் வரையில், ஆகாய கங்கை அருவிக்கு செல்ல வனத் துறையால் திங்கள்கிழமை (டிச. 2) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொல்லிமலை வனச்சரகா் அறிவழகன் கூறியது: -ஆகாய கங்கை அருவியில் வெள்ளப்பெருக்கு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் அப்பகுதியில் தொடா்மழை பெய்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் நனைந்தபடியே படியிறங்கி செல்ல வேண்டியதுள்ளதால், தற்காலிகமாக அருவியில் குளிக்க திங்கள்கிழமை முதல் தடை விதிக்கப்படுகிறது. மழை குறைந்தவுடன் மீண்டும் அனுமதி வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம், ஜலகண்டபுரம் மேம்பாலம் அருகே 3 உடல்கள்: கொலையா?

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT