நாமக்கல்

ஆகாய கங்கை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

DIN

கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை புதன்கிழமை விலக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை அருவியில் குளிப்பதற்காக, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவா். கடந்த சில நாள்களாக அங்கு தொடா்ச்சியாக மழை பெய்து வருவதால், நனைந்தபடியே 1300 படிக்கட்டுகளை கடந்து அருவிக்கு செல்ல வேண்டிய சூழல் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, திங்கள்கிழமை ஆகாய கங்கை அருவிக்கு செல்ல மாவட்ட வனத்துறையால் தடை விதிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமையும் இந்த தடை நீடித்தது. இந்த நிலையில், புதன்கிழமை மழை குறைந்து, வெயில் காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனா். இதனால் தொலை துரங்களில் இருந்து வந்திருந்தவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

யூடிஎஸ் செயலி பிரசாரக் குழுவுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT